பாகிஸ்தானில் இருந்து 145 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

  முத்துமாரி   | Last Modified : 29 Dec, 2017 12:52 pm


பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய மீனவர்கள் 145 பேர் நல்லெண்ண அடிப்படையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அரபிக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற போது எல்லை தாண்டியதாக இந்திய மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் பாகிஸ்தான் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கராச்சியில் உள்ள லந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது நல்லெண்ண அடிப்படையில் 145 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குஜராத் மற்றும் டையூ பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்திய மீனவர்கள் கராச்சியில் இருந்து லாகூருக்கு சாலை வழியாக  கொண்டு செல்லப்பட்டு இன்று காலை வாகா எல்லையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 146 மீனவர்கள் ஜனவரி 8ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசு இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close