குல்பூஷண் ஜாதவ் பலுசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை: பலோச் தலைவர்

  முத்துமாரி   | Last Modified : 29 Dec, 2017 04:44 pm


பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக பலோச் தேசிய தலைவர் மர்ரி கருத்து தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை அந்நாட்டு போலீசார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக வழக்கில், ஜாதவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஜாதவை சந்திக்க அவரது தாயார் மற்றும் மனைவி சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் முறைகேடாக நடத்தியுள்ளனர்.

இதற்கு இந்தியா முழுவதும் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  ஜாதவ் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ஜாதவிற்கு ஆதரவாக பலோச் தலைவர்  ஹைர்பையர் மர்ரி  கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், "பாகிஸ்தான் கூறுவது போல் ஜாதவ் பலுசிஸ்தானில் கைது  செய்யப்படவில்லை. அவர் ஈரான் பகுதியில் இருந்த போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மதவாதிகள் சிலரால் கடத்தப்பட்டு பின்னர் பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தான் பலோச் அகதிகள் மதவாதிகளால் கடத்தப்பட்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளிடம் விற்கப்பட்டனர்" என அவர் தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close