டிரம்ப்புக்கு கணக்கு தெரியுமா? பாகிஸ்தான் கேள்வி

  SRK   | Last Modified : 03 Jan, 2018 09:52 am


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் நாட்டை கடுமையாக விமர்சித்தார். தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வழங்கிவரும் நிதியுதவிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் எழுதினார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், டிரம்ப் சொல்வது பொய் என்றும், அமெரிக்கா கொடுத்த நிதியுதவியை ஒரு தணிக்கையாளரை வைத்து சரி பார்த்து விட்டு பின்னர் டிரம்ப் பேச வேண்டும் என்றும்பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிப்பதையும், அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதையும் அமெரிக்க அதிபர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். ஒசாமா பின் லேடன், முல்லா உமர் உட்பட, அமெரிக்கா தேடி வந்த எண்ணற்ற தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வந்தது. இருந்தாலும், தெற்காசியாவில் அமெரிக்காவுக்கு பல விதங்களில் பாகிஸ்தானின் ஆதரவு தேவை என்பதால், அவர்கள் அதை பொறுத்துக் கொண்டு, தொடர்ந்து நிதியுதவி அளித்து வந்தனர்.

ஆனால், தீவிரவாதத்தை எதிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் டிரம்ப், பாகிஸ்தான் மீது பல விமர்சனங்களை அடுக்கியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடந்த 15 வருடங்களில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதியுதவி அளித்துள்ளதாகவும், தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தால், அதை நிறுத்தி விடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு கொடுப்பதாக இருந்த சுமார் 1600 கோடி ரூபாய் நிதியுதவியை அமெரிக்க நாடாளுமன்றம் ரத்து செய்தது.

இதனால் கடும் கோபமடைந்த பாகிஸ்தான் அரசு, அமெரிக்க தூதரை அழைத்து தனது ஆதங்கத்தை தெரிவித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் க்வாஜா அசீப் ட்விட்டரில், "அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுக்கு கடந்த 15 வருடங்களில் 33 பில்லியன் டாலர்கள் (ரூ.2 லட்சம் கோடி) கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் உள்ள ஒரு தணிக்கை நிறுவனத்தை வைத்தே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை  ஆய்வு செய்து பார்க்கட்டும். யார் பொய் சொல்கிறார்கள் என அப்போது தெரியும்" என எழுதினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close