இந்தியாவுக்கு எதிராக பேசும் குல்பூஷண்: வைரலாகும் வீடியோ!

  முத்துமாரி   | Last Modified : 04 Jan, 2018 04:15 pm


பாகிஸ்தான் அதிகாரிகள் தன்னை நன்கு கவனித்து கொள்வதாக குல்பூஷண் கூறுவது போன்ற வீடியோ ஒன்றை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவை அந்நாட்டு போலீசார் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கில், ஜாதவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சிறையில் இருக்கும் ஜாதவை சந்திக்க அவரது தாயார் மற்றும் மனைவி சென்றனர்.

அந்த சமயத்தில் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் முறைகேடாக நடத்தினர். இதற்கு இந்தியா முழுவதும் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம், இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஜாதவை அவரது தாயார் மற்றும் அவரது மனைவி சந்தித்த வீடியோவை பாகிஸ்தான் அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, தற்போது குல்பூஷண், தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுவது போன்ற ஒரு வீடியோவை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.


அதில்  குல்பூஷண், "நான் இங்கு மிகவும் பாதுகாப்பாக தான் இருக்கிறேன். என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்.  என்னுடைய தாயார் வந்து என்னை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்திய தூதரக அதிகாரிகள் தான் என்னுடைய தாயார் மற்றும் மனைவியை திட்டியதாக நான் கருதுகிறேன். அவர்கள் கண்களில் பயம் இருந்தது. நான் இந்திய கடற்படையின் அதிகாரி. நான் உளவுத்துறைக்காக வேலை செய்தேன் என ஏன் இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை" என பேசியுள்ளார். 

ஆனால் இந்திய தரப்பு ஆய்வாளர்கள், இது பொய் வீடியோ, பாகிஸ்தான் இந்தியாவை ஏமாற்றும் நோக்கில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது என தெரிவிக்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close