திருமணத்திற்கு முன் பேசியதால் மணமக்கள் கொலை

  முத்துமாரி   | Last Modified : 05 Jan, 2018 08:39 pm


பாகிஸ்தானில் திருமணத்திற்கு முன் மணமக்கள் இருவரும் சந்தித்து பேசியதால் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் சிந்து மாகாணம் நயி வாகி கிராமப்பகுதியில் நஷீரான் என்ற பெண் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள தனது கணவரை சந்திக்க சென்றுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணின் தாய்மாமன் இதை பார்த்துள்ளார். கோபத்துடன் மணமக்களை நோக்கி வந்த அவர் இருவரையும் கொலை செய்துள்ளார். சம்பவம் அறிந்த காவல்துறை விசாரணை நடத்தி இருவரை கைது செய்துள்ளது. இருவருமே அந்த பெண்ணின் தாய்மாமன்கள் ஆவர். 

பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் இதுபோன்ற 'கௌரவ கொலைகள்' அதிகமாக நடந்து வருகிறது. காதல் திருமணம் செய்துகொள்ளும் மணமக்கள், முக்கியமாக பெண்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 650 கௌரவ கொலைகள் நடந்திருப்பதாக பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமைகள் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பல கொலைகள் காவல்துறைக்கு தெரியாததால் பலியானவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close