'துரோகம் செய்யும் நண்பன்'- அமெரிக்கா மீது பாகிஸ்தான் விமர்சனம்

  Anish Anto   | Last Modified : 08 Jan, 2018 01:57 pm


அமெரிக்கா எப்போதும் துரோகம் செய்யும் நண்பனாக நடந்து கொள்வதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. 

தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் மீது அமெரிக்கா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ரெட்டை வேடம் போடுவதாகவும் கூறி இருந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டிற்கு வழங்கி வந்த பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியையும் நிறுத்தியது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஆசிப் அமெரிக்கா ஒரு நண்பனை போலவோ அல்லது ஆதரவு நாடு போலவோ நடந்து கொள்ளவில்லை. எப்போதும் துரோகம் செய்கின்ற ஒரு நண்பனாகவே பாகிஸ்தான் உள்ளது என தெரிவித்தார்.

இதேபோல் பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கானும் அமெரிக்காவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்கா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும் என்றும், பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்கா அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் வழியான அமெரிக்காவின் வான் வழி போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். நேற்று லாஹூர் நகரில் அமெரிக்காவுக்கு எதிராக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அமெரிக்கா கொடியை எதிர்த்தும், டிரம்ப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close