பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

  முத்துமாரி   | Last Modified : 11 Jan, 2018 03:36 pm


பாகிஸ்தானில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானில் கசூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி சாய்நாப் ஜனவரி 4ம் தேதி காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் நேற்று சிறுமியின் உடலை கண்டெடுத்துள்ளனர். பின்னர் சோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. 

இதனையடுத்து பொது மக்கள் கோபமுற்று காவல் நிலையத்தை சூறையாடினர். தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இதனால் காவல்துறையினர் அங்குள்ள மக்களை விலக்கும் பொருட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பொதுமக்களில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து சிறுமிக்கு ஆதரவாக பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close