எங்களது பலத்தை இந்தியா சோதித்து பார்க்கட்டும்: பாகிஸ்தான் சவால்

  முத்துமாரி   | Last Modified : 14 Jan, 2018 10:15 pm


பாகிஸ்தான் எந்த விதத்தில் தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் கூறியிருந்தார். ராணுவ தளபதியின் இந்த கருத்துக்கு தற்போது பாகிஸ்தான் பதிலளித்துள்ளது. 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ராணுவ தளபதியின்  பொறுப்பற்ற அறிக்கை இது. அவர் இருக்கும் பதவிக்கு இதுபோன்ற பேச்சு ஏற்புடையது அல்ல.  இதன் மூலம் பாகிஸ்தானை அவர் அணுஆயுத போருக்கு அழைக்கிறார். அது தான் அவரது விருப்பம் என்றால், இந்தியா எங்களது பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் தெரிய வரும்" என குறிப்பிட்டுள்ளார். 

அவரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பாசில்,  "இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற பேச்சு இந்தியா கெட்ட எண்ணத்துடன் நடந்துகொள்வதை காட்டுகிறது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியா எங்களை தவறாக எடைபோட வேண்டாம். பாகிஸ்தானிடம் தன்னை காத்துக்கொள்ளும் திறமை இருக்கிறது" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close