பெனசிரை நாங்கள்தான் கொன்றோம்... பொறுப்பேற்ற தலிபான்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 15 Jan, 2018 06:26 pm

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோவை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று 11 ஆண்டுகள் கழித்துப் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். 

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான பெனசிர் பூட்டோவை 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தேர்தல் பிரசாரத்தின்போது வெடிகுண்டு வைத்து கொலை செய்தனர் பயங்கரவாதிகள். இதற்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பாகிஸ்தானில் செயல்படும் தாரிக் இ தலிபான்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்பட்டது. இதைத் தலிபான்கள் ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. 

இந்தநிலையில், 11 ஆண்டுகள் கடந்த நிலையில், பாகிஸ்தான் தலிபான்கள் பெனசிரை நாங்கள்தான் கொன்றோம் என்று பொறுப்பேற்றுள்ளனர். இது தொடர்பாகப் பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த அபு மன்சூர் என்பவர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாங்கள்தான் கொன்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்தப் புத்தகத்தில், "பெனசிர் அமெரிக்காவின் திட்டப்படி பாகிஸ்தான் திரும்பினார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஜாகிதீன்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட முடியாது. அதனால்தான் அவரைக் கொலை செய்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பெனசிர் பூட்டோவை கொலை செய்த விதம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் அவர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close