ஹபீஸ் சையது மீது நடவடிக்கை இல்லை: பாகிஸ்தான் பிரதமர்

  முத்துமாரி   | Last Modified : 17 Jan, 2018 04:55 pm


பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது வழக்குகள் எதுவும் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். 

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் தற்போது ஜமாத்-உத்-தவா எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கிறான். இந்தியாவில் 2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதலுக்கு ஹபீஸ் மூளையாக செயல்பட்டுள்ளான். வீட்டுச்சிறையில் இருந்த ஹபீஸ் சயீத்தை போதிய ஆதாரங்கள் இல்லாததால் பாகிஸ்தான் அரசு அவனை விடுவித்தது. 


இதனையடுத்து 2018ல் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான மில்லி முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடப்போவதாக ஹபீஸ் அறிவித்துள்ளான். அவனது கட்சியை பதிவு செய்யக்கூடாது எனவும் ஒருபக்கம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காஹன் அப்பாஸி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், "ஹபீஸ் சயீத் மீதான குற்றங்களுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக்கூறி 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அவனை விடுவித்து விட்டது. தற்போது அவன் மீது வழக்குகள் எதுவும் இல்லை, எனவே ஹபீஸ் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close