ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா, இந்தியா வலியுறுத்தல்

  முத்துமாரி   | Last Modified : 20 Jan, 2018 07:58 am


பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க, இந்திய நாடுகள் பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் தற்போது ஜமாத்-உத்-தவா எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கிறான். இந்தியாவில் 2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதலுக்கு ஹபீஸ் மூளையாக செயல்பட்டுள்ளான். வீட்டுச்சிறையில் இருந்த ஹபீஸ் சயீத்தை போதிய ஆதாரங்கள் இல்லாததால் பாகிஸ்தான் அரசு அவனை விடுவித்தது. 

2018ல் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமது தலைமையிலான மில்லி முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடப்போவதாக ஹபீஸ் அறிவித்து அதற்கான முயற்சியும் எடுத்து வருகிறான். 

இந்த நிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் நாடு அவனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, 'தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது வழக்குகள் எதுவும் இல்லாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது' என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தது மற்ற நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கனவே ஹபீஸை தண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வந்த நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "ஹபீஸ் சர்வதேச அளவிலான குற்றவாளி. பல தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அவன் ஐ.நா. பாதுகாப்பு குழுவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளான். அவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் இதுபோன்று நடந்துகொண்டதால் தான் அவர்களுக்கு ராணுவ உதவி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே தவறை செய்தால் பாகிஸ்தான் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து,  இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்,  ''தீவிரவாதி ஹபீஸின் முழு விபரங்கள் மற்றும் ஆதாரங்கள் இணையதளங்களிலேயே கிடைக்கும். ''பாகிஸ்தான் அரசு கண்களை மூடிக்கொண்டு ஆதாரமில்லை எனக் கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் ஹபீஸை சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ளது,'' என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close