மனைவியை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்த பாக். அமைச்சர்

  முத்துமாரி   | Last Modified : 03 Feb, 2018 07:41 am


பாகிஸ்தானில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது மனைவியை சுட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹசர்கான் பைஜரானி சிந்து மாகாணத்தின் முன்னாள் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர். இவரது மனைவி  பரிதா ரஸாக் பத்திரிக்கைத் துறையில் வேலை செய்தவர். இருவரும் நேற்று இரவு கராச்சியில் உள்ள அவர்களது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருவரும் பிணமாக கிடந்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.

பின்னர் அங்கு சோதனை செய்து அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அமைச்சர் நேற்று இரவு தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், அவரது மனைவியின் உடலில் 3 குண்டுகள் பாய்ந்துள்ளன. குடும்பத் தகராறு காரணமாக இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close