பாகிஸ்தான் ராணுவ முகாமில் தற்கொலை தாக்குதல்: 3 பேர் பலி

  நந்தினி   | Last Modified : 03 Feb, 2018 10:02 pm


பாகிஸ்தானின் ராணுவ முகாமிற்கு அருகே நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து உள்ளனர். 

பாகிஸ்தான் ராணுவ முகாமிற்கு பக்கத்தில் விளையாட்டு பிரிவு பகுதியில் இந்த தற்கொலை குண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர், அப்பகுதியை சுற்றிவளைத்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தேடும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருந்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close