மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

  நந்தினி   | Last Modified : 03 Feb, 2018 10:24 pm


பாகிஸ்தானில் அமைச்சர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

மிர் ஹசர் கான் பிஜாராணி (71) என்ற அந்த அமைச்சர், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் மூத்த அமைச்சராவார். நேற்று இவர் இல்லத்தில், அவரது மனைவி பாராஹ் ரசாக் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஹசர் கானும், அதே இடத்தில் இறந்து கிடந்துள்ளார். நேற்றிரவு வீட்டிற்கு சென்ற ஹசன் கானின் மகன் வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியுள்ளான். ஆனால், கதவை யாரும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறான். ஆனால், சம்பவ இடத்தில் தாய் மற்றும் தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் போலீசுக்கு தகவல் கூறியிருக்கிறான். போலீஸ் மூலம், தடவியல் நிபுணர்களால், ஹசர் கான், மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கடந்த சில நாட்களாக ஹசர் கானுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது. இதனால் குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறேதும் பிரச்னை இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close