ஹபீஸ் சயீத் 'தீவிரவாதி' என பாகிஸ்தான் அறிவிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 13 Feb, 2018 11:17 am


உலக நாடுகளின் அழுத்தத்தினால் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹபீஸ் சயீத் தீவிரவாதி என அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது. 

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹபீஸ் சயீத், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்தவன். தற்போது ஜமாத்-உத்-தவா எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கிறான். இந்தியாவில் 2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதலுக்கு இவன் மூளையாக செயல்பட்டுள்ளான். போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் ஹபீஸ் சயீத் வீட்டுச்சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டான். 

இதனையடுத்து பாகிஸ்தானில் அவனது தலைமையிலான மில்லி முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக வரும் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி வந்தான். சுதந்திரமாக உலா வந்த ஹபீஸ் சயீத் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அந்நாட்டு பிரதமர் ஷாஹித் காஹன் அப்பாஸியும் தெரிவித்தார். ஆனால் உலக நாடுகள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தீவிரவாத அமைப்புக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் எனவும் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. 

இந்த நிலையில் உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தானின் ஹபீஸ் சயீத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளான். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close