ஆன்மீக ஆலோசகரை மணந்தார் பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான்

  SRK   | Last Modified : 19 Feb, 2018 08:47 am


பாகிஸ்தான் நாட்டின் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், தனது ஆன்மீக ஆலோசகரான பூஷாரா மனேகாவை திருமணம் செய்துள்ளார். 

கடந்த சில நாட்களாக இம்ரான் கானுக்கும், மனேகாவுக்கும் இடையே திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்று அது உறுதி செய்யப்பட்டது. 

மனேகாவின் இல்லத்தில் வைத்து திருமணம் நடந்தததாக கூறப்படுகிறது. 40 வயதான பூஷாரா மனேகாவுக்கு இதற்கு முந்தைய திருமணத்தில் 5 குழந்தைகள் உண்டு. 

ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, விவாகரத்தான நிலையில், தற்போது இம்ரான் கான் 3வது திருமணம் செய்துள்ளார். 1995ம் ஆண்டு பிரபல பத்திரிகையாளர் ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை கான் திருமணம் செய்தார். 2004ம் ஆண்டு அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. பின்னர், 2015ம் ஆண்டு, பாகிஸ்தான் டிவி பிரபலம் ரேஹம் கானுடன் இம்ரானுக்கு திருமணம் நடந்தது. இரண்டாவது திருமணம் வெறும் 15 மாதங்களில் முறிந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close