நவாஸ் ஷெரிஃப்புக்கு மற்றொரு 'செக்' வைத்த பாக். உச்ச நீதிமன்றம்

  SRK   | Last Modified : 21 Feb, 2018 09:24 pm


முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியில் இருந்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

68 வயதான நவாஸ் ஷெரிஃப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் அதிரடி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக தொடர்ந்து வந்தார். தனது மனைவியை பிரதமராக்க அவர் முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், அரசியல் சாசனத்தின் விதிகளை மீறி நடந்து கொண்டவர்களால் அரசியல் கட்சியின் தலைவராக பதவி வகிக்க முடியாது என 3 நீதிபதிகள் கொண்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close