தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கும் நாடுகளில் பாகிஸ்தான் மீண்டும் சேர்ப்பு

  SRK   | Last Modified : 23 Feb, 2018 11:22 pm


சர்வதேச அளவில் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கும் நாடுகளில் பாகிஸ்தானை மீண்டும் சேர்க்க உள்ளதாக சர்வதேச தீவிரவாத கண்காணிப்பாக அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் நடக்கும் நிதி மோசடிகளை சர்வதேச நிதி நடவடிக்கை ஆணையம் கண்காணித்து வருகிறது. இந்த ஆணையம் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குபவர்களை, ஒரு கருப்பு பட்டியலில் சேர்த்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வலியுறுத்தலின் பேரில் அந்த பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படவுள்ளது.

தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

இதற்கு முன், 2015ம் ஆண்டு அந்த பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு, எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் பாகிஸ்தானை மீண்டும் பட்டியலில் சேர்க்க ஆலோசனை நடந்து வந்தது.

முன்னதாக சீனா, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையை எடுக்கவிடாமல் தடுத்து வந்த நிலையில், தற்போது ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தானை இனி, இந்த சர்வதேச ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கத் துவங்குமாம். 

வரும் ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close