ஹபீஸ் சயீத்தை கைது செய்யத்தடை: லாகூர் உயர்நீதிமன்றம்

  முத்துமாரி   | Last Modified : 08 Mar, 2018 04:25 pm


தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு கைது செய்யக்கூடாது என லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹபீஸ் சயீத், 'ஜமாத்-உத்-தவா' எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருக்கிறான். இந்தியாவில் 2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். வீட்டுச்சிறையில் இருந்த ஹபீஸ் சயீத்தை போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி பாகிஸ்தான் லாகூர் நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது. 

தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்த ஹபீஸை தண்டிக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. முன்னதாக பாகிஸ்தான் அதிபர் ஷாஹித் காஹன் அப்பாஸி, 'ஹபீஸ் சயீத் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லாததால் அவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது' என தெரிவித்திருந்தார். ஆனால் உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக ஹபீஸை 'தீவிரவாதி' என பாகிஸ்தான் அரசே சமீபத்தில் அறிவித்தது. 

இந்நிலையில், ஹபீஸ் லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அதில், 'என்னை எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் அரசு அல்லது பஞ்சாப் மாகாண அரசு கைது செய்யலாம். எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும்' என கோரினார். 

இந்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம், ஹபீஸை பாகிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாண அரசு கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மனுதாரரின் புகாருக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close