ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவு

  முத்துமாரி   | Last Modified : 10 Mar, 2018 11:44 am


பாகிஸ்தான்  பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-உத்-தவா எனும் தீவிரவாத அமைப்புகளின் தலைவன்  ஹபீஸ் சயீத் இந்தியாவில் 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். வீட்டுச்சிறையில் இருந்த அவன் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டான். 

சிறையில் இருந்து வந்ததும் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் 2019 தேர்தலில் தனது தலைமையிலான மில்லி முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட உள்ளது என அறிவித்தான். ஆனால் ஹபீஸ் சயீத் உருவாக்கிய கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

கட்சியை பதிவு செய்யும் பணியில் இறங்கிய போது, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்,  ஹபீஸ் சயீத்தின் அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முன்னதாக லாகூர் இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் மக்கள் கட்சியை விட பெருவாரியான வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close