நவாஸ் ஷெரிப் மீது ஷூ வீச்சு; 3 பேர் மீது வழக்குப்பதிவு

  முத்துமாரி   | Last Modified : 12 Mar, 2018 04:32 pm


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது ஷூ வீசிய விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நவாஸ் ஷெரிப் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கினார். இதனால் பிரதமர் பதவியில் இருந்தும் விலக நேரிட்டது. இவரது ஊழல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

நேற்று(மார்ச்.11) நவாஸ் ஷெரிப் லாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது மேடையில் அவர் பேச முற்பட்டபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த நபர், நவாஸ் ஷெரிப் மீது ஷூவை வீசி விட்டு ஓடினார். உடனடியாக அவரை காவல்துறையினர் பிடித்தனர். அவர் மீது வாக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close