நவாஸ் ஷெரிப்புக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2018 02:07 pm


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

பனாமா ஊழல் வழக்கில் சிக்கியதை அடுத்து நவாஸ் ஷெரிப்பை பிரதமர் பதவியில் இருந்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. மேலும் நவாஸ் ஷெரிப் வெளிநாட்டில் கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்த்து வைத்ததாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தலில் தடை விதிக்க கோரிய வழக்கு பாகிஸ்தான்  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 

இன்றைய விசாரணை முடிவில், அந்நாட்டு அரசியலமைப்பு விதி 61(f) இன் படி, நவாஸ் ஷெரிப் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த ஜஹாங்கீர் தாரீன் உள்ளிட்ட பலருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close