வைரலாகும் பாகிஸ்தானின் 'தங்க' மாப்பிள்ளை

  Padmapriya   | Last Modified : 16 Apr, 2018 03:06 pm

பாகிஸ்தான் நகரமான லாகூரைச் சேர்ந்தவர் சல்மான் ஷாகித். வர்த்தகரான இவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு மணமகன் வீட்டில் வலிமா எனப்படும் அவர்களது முறையான விருந்து நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் மணமகன் சல்மான் தங்கத்தினால் ஆன சூட், விலை உயர்ந்த கற்கள் பதித்த டை மற்றும் தங்க ஷூ அணிந்திருந்தார்.  இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.25 லட்சமாம்.

அவற்றில் மணமகன் சல்மான் அணிந்திருந்த தங்க ஜரிகை சூட் மட்டும் பாகிஸ்தான் ரூபாயில் 65 ஆயிரம் மதிப்பிடத்தக்கது. பலவிதமான உலோக கற்களால் ஆன டையின் மதிப்பு 7 லட்சம். அவர் அணிந்திருந்த ஷூக்கள் மட்டும் 320 கிராம் சுத்த தங்கத்தில் தயாரானவை. அவற்றின் மதிப்பு 17 லட்சம் ரூபாய் ஆகும்.

தங்கத்தினால் ஆன உடை மற்றும் ஷூ அணிந்திருந்த மணமகன் சல்மான் ஷாகித் விழாவில் தகதகவென ஜொலித்ததால் திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அவரை அதிசயமாகவும் ஆச்சரியத்துடனும் பார்த்தனர். பலர் அவரோடு செல்ஃபி எடுத்ததோடு அல்லாமல் அவரது ஆபரணங்களை தனித்தனியாக படம் எடுத்தனர். 

இது குறித்து சல்மான் சாகித், " நான் எப்போதும் தங்க ஷூக்கள் அணிவதை தான் விரும்புகிறேன். பொதுவாக மக்கள் தங்கத்தை கழுத்திலும் தலையில் கிரீடமாகவும் அணிகிறார்கள். நாம் சம்பாதிக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் காலில் ஒட்டும் தூசி போன்றது. அது காலுக்கு கீழே தான் இருக்க வேண்டும்" என்கிறார். 

இதனால், இந்த 'தங்க' மாப்பிள்ளையின் புகைப்படங்கள் தான் இன்ஸ்டாகிராமில் 2 நாட்களாகவே அதிகம் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. இப்போது பாகிஸ்தான் மாப்பிள்ளை உலகம் முழுவதிலும் பேசப்படும் மாப்பிள்ளையாக ஆகிவிட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close