பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கங்களில் வெடி விபத்து: 23 பேர் பலி

Last Modified : 06 May, 2018 11:05 pm

பாகிஸ்தானில் இன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள குயிட்டா மாகாணத்தில் உள்ள மார்வார் பகுதியில் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த சுரங்கத்தில் இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 20க்கும் அதிகமானோர் சிக்கினர். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல, குயிட்டாவில் உள்ள மற்றொரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழந்தனர்.  இந்த சுரங்கங்கள் பாதுகாப்பு பற்றாக்குறைக் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரு இடங்களில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக அதிகாரி இப்திகார் அகமது தெரிவித்துள்ளார். இவ்விரண்டிலும் எந்த தீவிரவாத செயலும் இருப்பதாக தெரியவில்லை என்று முதற்கட்டத் தகவலில் தெரிவிக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close