பாகிஸ்தான் மந்திரி அசன் இக்பால் சுடப்பட்டார்!!

  Sujatha   | Last Modified : 07 May, 2018 07:06 am


பாகிஸ்தான் உள்துறை மந்திரி அசன் இக்பால் பொது கூட்டத்தில் பேசி கொண்டிருக்கையில் இளைனரால் சுடப்பட்டார்.  

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த அசன் இக்பால் (வயது 59). அந்நாட்டு உள்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவர் அந்நாட்டில் வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் பொது கூட்டத்தில் பேசி வருகிறார். இந்நிலையில், நேற்று  நரோவால் மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ருர் பகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசி கொண்டிருந்த அசன் இக்பாலை இளைஞர் ஒருவர் சுட்டார். அந்த குண்டு அவருடைய வலதுபக்க தோள்பட்டையில் பாய்ந்தது. இதனால் மேடையிலேயே அசன் இக்பால் சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட அசன் இக்பால்  அபாயக்கட்டத்தை தாண்டியதாகவும், உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர். 


 இதனிடையே அசன் இக்பாலை சுட்ட வாலிபர் அபின் உசைனிடம் (21) போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close