பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் அதிகபட்சமாக 5.8 ஆக பதிவு!

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 12:46 pm


பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் பன்னு(Bannu) மாவட்டத்தில் இருந்து சுமார் 29 கி.மீ- க்கு வடக்கே இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 என பதிவாகியுள்ளது. அதேபோன்று இஸ்லாமாபாத், பெஷாவர் வடமேற்கு எல்லைப்புற மாகாணப்பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 15 முதல் 20 வினாடிகள் வரை இந்த அதிர்வானது உணரப்பட்டுள்ளது.

மேலும், ஒரு சில இடங்களில் 5.8 எனவும், ஒரு சில இடங்களில் 5.4 ஆகவும் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சம் 5.1 லிருந்து அதிகபட்சமாக 5.8 புள்ளிகள் வரை பதிவாகியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பெரும்பாலான இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close