முஷாரப்பை கைது செய்து சொத்துக்களை முடக்க உத்தரவு

  முத்துமாரி   | Last Modified : 10 Mar, 2018 06:53 am


தேசத்துரோக வழக்கில் தலைமறைவாகியுள்ள முஷாரப்பை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும், அவரது சொத்துக்களை முடக்கவும்  பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரப் கடந்த 2007ல் அவர் ஆட்சியில் இருந்த போது அரசியல் நெருக்கடி காரணமாக அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். அந்த சமயத்தில் நீதிபதிகளின் பதவியை பறித்து அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் பாகிஸ்தானில் இருந்து தப்பி துபாயில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

இவரது வழக்கு பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணையில் இருந்து வருகிறது. நேற்று நீதிபதிகள், தலைமறைவாகியுள்ள முஷாரப்பை கைது செய்து நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜர்படுத்தப்படவேண்டும் என்றும் அவரது சொத்துக்களை முடக்கவும்  உத்தரவிட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close