நவாஸ் ஷெரிப் இல்லத்துக்கு அருகே குண்டு வெடிப்பு; 9 பேர் பலி

  SRK   | Last Modified : 15 Mar, 2018 12:49 am


முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் இல்லத்துக்கு அருகே உள்ள காவல்துறை சாவடியில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில், 9 பேர் கொல்லப்பட்டனர். 

லாகூரில் உள்ள ரைவிண்ட் பகுதியில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின்  சொகுசு பங்களா உள்ளது. பங்களா அமைந்துள்ள இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் கூடம் இடம்பெற்றுள்ளது. அதன் அருகே இருக்கும் காவல்துறை சாவடியில் இன்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பில், 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் போலீஸ் அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது ஒரு தற்கொலை குண்டு தாக்குதல் என்றும், போலீஸ் அதிகாரிகளை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close