அமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரை நிறுத்தி சோதனை!

  SRK   | Last Modified : 28 Mar, 2018 10:20 pm


பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கஃகான் அப்பாஸி, அமெரிக்கா சென்றபோது, விமான நிலைய அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை செய்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

அமெரிக்காவுடனான பாகிஸ்தான் நாட்டின் உறவு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. ட்ரம்ப் அதிபரான பிறகு, தீவிரவாதிகளுக்கு இடமளிப்பதாக பாகிஸ்தானை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றார். தீவிரவாதிகளை ஒடுக்க அந்நாடு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறிவரும் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய ராணுவ நிதியுதவியையும் நிறுத்தி வைத்தார். பாகிஸ்தான் நாடும் பதிலுக்கு அமெரிக்க அரசை குற்றம் சாட்டி வருகிறது. 


இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கஃகான் அப்பாஸி, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலைய அதிகாரிகள், அவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். சோதனை முடிந்து அவர் தனது உடையை சரி செய்து கொண்டு செல்வது ஒரு வீடியோவில் தெரிகிறது. இது பாகிஸ்தான் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீதுள்ள கோபத்தில் பிரதமரை இவ்வாறு இழிவுபடுத்தியுள்ளதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.  

ஆனால்,  பிரதமர் அப்பாஸி அரசு பயணமாக செல்லாமல், சொந்த பயணமாக சென்றதால் தான் இந்த சோதனை நடந்ததாக ஒரு தரப்பில் கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரியை சந்திக்க அப்பாஸி  அடிக்கடி அமெரிக்கா செல்வாராம். ஆனால், பாகிஸ்தான் ஊடகங்கள் இந்த காரணத்தை ஏற்க மறுத்து, அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close