6 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார் மலாலா!

  SRK   | Last Modified : 29 Mar, 2018 09:00 am


தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா யூசப்சாய், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளார்.

2012ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பெண்களை அடிமைப்படுத்தும் கொள்கைகளை கொண்ட அவர்கள், பெண்கள் கல்வியை தடுக்க பள்ளிகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஸ்வாட் பகுதியில் இருந்த மலாலா, தலிபான் தலைமையில் அந்த பகுதி மக்கள் படும் கஷ்டத்தை பற்றி இணையதளத்தில் எழுதினார். பின்னர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தார். 

இவரது செயல்கள் தீவிரவாதிகளை கோபப்படுத்தியதால், ஒருநாள் பள்ளியில் இருந்து திரும்பிய 15 வயது மலாலாவை, தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். தலையில் குண்டடி பட்ட அவர், பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சர்வதேச அளவில் மலாலா பேசப்பட்டார். தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் விடுத்தனர். உலக நாடுகளும் தலிபனை ஒடுக்க நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தின.

அதன்பின்னர், தனது குடும்பத்தினருடன் பிரிட்டனுக்கு குடியேறிய அவர், அங்கு வசித்து வருகிறார். நான் மலாலா, மலாலாவின் மேஜிக் பென்சில் என்ற பெயர்களில் புத்தங்கங்களை எழுதியுள்ளார். அவரது வாழ்க்கையை மையமாக கொண்ட 'என் பெயர் மலாலா' என்ற திரைப்படமும் வெளியானது. 2015ம் ஆண்டு, இந்திய சமுக ஆர்வலர் கைலாஷ் சத்தியார்த்தியுடன் சேர்ந்து அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மலாலா. 

6 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று பாகிஸ்தான் திரும்பியுள்ளார் மலாலா. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close