இஸ்லாமியர் என்பதால் சல்மான் கானுக்கு தண்டனை: பாக். அமைச்சர் கண்டுபிடிப்பு

  Padmapriya   | Last Modified : 07 Apr, 2018 12:03 am

நடிகர் சல்மான் கான் சிறுபான்மை சமூகமான இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான், அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆஸிஃப் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆஸிஃப் கூறும்போது, ''சல்மான் கான் சிறுபான்மையினர் என்பதால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை. இந்தியாவை ஆளும் கட்சியைச் சேர்ந்த மதத்திலிருந்து சல்மான் கான் வந்திருந்தால் அவருக்கு இம்மாதிரியான கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்காது'' என்றார்.

'ஹம் சாத் சாத் ஹெயின்' என்ற படப்பிடிப்பின்போது நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கடந்த 1998-ம் ஆண்டு சென்றிருந்தனர்.

அங்கு ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வெளிமான் என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, அந்த மற்ற நடிகர்களும் அவருடன் இருந்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பான 20 ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று  ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான் கானை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அளித்து உத்தரவிட்டது. மற்றவர்கள் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close