பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

  SRK   | Last Modified : 26 Apr, 2018 07:04 pm


பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிவதற்காக தான் பெற்றிருந்த அனுமதியை, அரசிடம் இருந்து மறைத்ததற்காக, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான்  வெளியுறவுத்துரை அமைச்சர் கவாஜா ஆசிப், 2013ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிவதற்கான ஒர்க் பெர்மிட் வைத்திருந்தார். அதை பற்றிய சரியான விவரங்களை அவர் தேர்தலின் போது வெளியிடவில்லை. 

அன்று பிடிஐ கட்சியின் சார்பாக போட்டியிட்டு, ஆசிப்பிடம் தோற்ற உஸ்மான் தார், நீதிமன்றத்தில் ஆசிப்புக்கு எதிராக வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த நீதிமன்றம், இக்காமா எனப்படும் எமிரேட்ஸ் ஒர்க் பெர்மிட் குறித்து கேள்வி எழுப்பினர். தேர்தலின் போது, அவர் எமிரேட்ஸில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து சம்பளம் பெற்று வந்ததாக உஸ்மான் குற்றம் சாட்டியிருந்தார். 

ஆனால், தனக்கு அந்நிறுவனம் கௌரவ பணி தான் வழங்கியதாகவும், தான் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றும், ஆசிப் வாதிட்டார். இறுதியில் நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்த அரசு பணியிலும், ஆட்சியிலும் பதவி வகிக்க அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சரும் நீக்கப்பட்டிருப்பது, ஆளும் முஸ்லீம் லீக் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு இது மிகப்பெரிய இழுக்காக அமையும் வாய்ப்புள்ளது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக, கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close