2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: நவாஸ் ஷெரிப்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 09:52 am

2008 மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு, நவம்பர் 26ந்தேதி மும்பை ரயில் நிலையம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 166 மக்கள் கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகள் என இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கான ஆதாரங்களையும் திரட்டி பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இச்சம்பவம் தொடர்பான வழக்கு ராவல்பிண்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தவருமான நவாஸ் ஷெரீப் நாளேடு சமீபத்தில் கொடுத்த பேட்டியில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. இந்தத் தீவிரவாத குழுக்கள் எல்லை தாண்டிச் சென்று மும்பையில் அப்பாவி மக்கள் 160 பேரை சுட்டுக்கொல்ல எப்படி அனுமதிக்க இயலும். இதுதான் பாகிஸ்தான் கொள்கையா?

இதுபோன்ற செயலை ஒருபோதும் பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது. இதைத்தான் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் கூறுகின்றனர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் பாகிஸ்தான் தவிக்கின்றது.

ஒரு நாட்டுக்குள் ஒரு அரசுதான் இருக்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று அரசுகள் ஒன்றாகச் செயல்பட முடியாது. இப்படிப்பட்ட செயல்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். ஒரு அரசியலமைப்பு சட்டம் ஒரு அரசுதான் இயங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close