மும்பை தாக்குதல் குறித்த கருத்து: நவாஸ் ஷெரீப் மீது தேச துரோக வழக்கு

Last Modified : 15 May, 2018 11:37 pm

பாகிஸ்தான் எல்லையை தாண்டி சென்று மும்பையில் தாக்குதல் நடத்த நாம் அனுமதித்திருக்கக் கூடாது என்று கூறிய நவாஸ் ஷெரீப்  மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நவாஸ் ஷெரீப்பின் கருத்து தேசத்துக்கு துரோகம் விளைவிப்பதாக உள்ளது என்று கூறி லாகூர் உயர் நீதிமன்றத்தில் அப்தாப் விர்க் என்பவர் மனுதாக்கல் செய்தார். அதில், "நவாஸ் ஷெரீப்பின் கருத்து தேச பாதுகாப்புக்கும், மாநில அமைப்புகளுக்கும் எதிரானது. எனவே அவர் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து கடந்த சனிக்கிழமை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தவருமான நவாஸ் ஷெரீப் நாளேடுக்கு அளித்த பேட்டியில், "பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அவருடைய இந்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close