பாகிஸ்தானில் அனல் காற்று வீசியதில் 65 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 23 May, 2018 01:27 pm


பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 3 நாட்களாக அனல் காற்று வீசியதில் 65 பேர் வரையில் பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. நேற்று வெப்பநிலை 111 டிகிரி அளவுக்கு அதிகரித்தது. வெப்பத்தின் தாக்கத்தினால் பலர் உடல்நிலை மோசமாகியுள்ளது. அனல்காற்று வீசியதன் காரணமாக கராச்சி நகரில் இதுவரை 65 பேர் வரையில் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் வீட்டில் இருந்தபொழுது இறந்துள்ளனர். குழந்தைகளும் இவற்றில் அடங்குவர். வெப்பக்காற்றில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டின் சமூகநலத்துறை ஈடுபட்டுள்ளது. 

பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close