ஜூலை 25ல் பாகிஸ்தான் பொது தேர்தல்

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 08:46 am

பாகிஸ்தான் நாட்டில் வருகிற ஜூலை 25ந் தேதி பொது தோ்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் தற்போதைய பிரதமா் அப்பாஸி தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வருகிற 31ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் பொதுத்தோ்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

மேலும் அந்நாட்டு சட்டபடி ஒரு ஆட்சி காலம் முடிவடைந்த 60 நாட்களுக்குள் அடுத்த தோ்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில் ஆணையம் ஜூலை 25 முதல் 27ந்தேதிக்குள் தோ்தல் நடத்தலாம் என்று அந்நாட்டு அதிபா் மம்னூன் ஹூசைனுக்கு இந்த வார தொடக்கத்தில் பரிந்துரை செய்திருந்தது. 

அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 25ந்தேதி பொதுத்தோ்தலை நடத்த அதிபா் சம்மதம் தொிவித்துள்ளாா். மேலும் பாகிஸ்தானின் சிந்து, கையாபா், பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களுக்கான அமைச்சரவை பதவிகாலமும் நாளையுடன் முடிவடைகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close