முஷாரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் முடக்கம்

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 11:37 am
suspension-of-musharraf-s-national-identity-card-passport-ordered

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை முடக்க உள்துறை அமைச்சகத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் இருந்த போது கடந்த 2007ல் அந்நாட்டில் அவரச நிலையில் பிரகடனப்படுத்தினார். இதற்கு எதிராக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு கடந்த 2014ல் செய்யப்பட்டது. இதையடுத்து, 2016ல் சிகிச்சைக்காக துபாய் செல்ல வேண்டும் என நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி சென்று அவர் அங்கியே தங்கிவிட்டார். வழக்கு தொடர்ப்பாக ஆஜராக நீதிமன்றம் அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் அவரது சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரது தேசிய அடையாள  அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை முடக்க அரசு சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம், தேசிய தகவல் ஆணையத்திற்கும், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இவற்றை செய்த பிறகு முஷாரப் எந்த வித பண பரிவர்த்தனைகளும் எந்த நாட்டிலும் செய்ய முடியாது. அதேபோன்று உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close