பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் பதவியேற்பு

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 07:45 am
ex-pak-chief-justice-sworn-in-as-caretaker-pm

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் பதவியேற்றார். 

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பாகிஸ்தான் முதல்வராக இருந்த  அப்பாசியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தல் காலம் வரை இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து அந்நாட்டு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தது. இந்த அடிப்படையில், அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி  நசிருல் முல்க் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நேற்று பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அந்நாட்டின் குடியரசுத்தலைவர்  மம்னூன் உசேன் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர் நாட்டின் 7-வது இடைக்கால பிரதமர் ஆவார். இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பிரதமராக பதவி வகிப்பார்.  நசிருல் முல்க் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் பிரதமர் அப்பாசி, படை தளபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close