தீவிரவாதிகளை பாரபட்சம் பார்க்காமல் ஒதுக்குங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 07:28 pm
target-all-terrorists-without-distinction-us-tells-pakistan

தெற்காசியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக எந்த பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டது.

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் பாஜ்வாவுடன் இன்று தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். 

இந்த தொலைப்பேசி பேச்சுக் குறித்து பாம்பியோவின் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பு அதிகாரி ஹெதர் நாவெர்ட் கூறும்போது, "அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்கான வழிகளை பற்றி இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டிய தேவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தெற்காசியாவில் உள்ள அனைத்து தீவிரவாத மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கும்படி பாம்பியோ கேட்டு கொண்டார்" என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளை அந்நாடு கண்டுகொள்வதில்லை என அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.  26/11 மும்பை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா.வும், அமெரிக்காவும் அறிவித்தது. 

ஹபீஸ் சயீதின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.65 கோடி) விலை வைத்தது. உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாக லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், ஹபீஸ் சயீதை வீட்டுக் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 

பின்னர் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தில், ஹபீஸ் சயீத்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்டார். லஷ்கர், ஜமாத் உத்-தவா அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், அதனைத் தொடர்ந்து மில்லி முஸ்லிம் லீக் என்ற பெயரில் ஹபீஸ் சயீத் அரசியல் கட்சியை தொடங்கினார். சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுவதையும் புதிதாக அரசியல் கட்சி அலுவலகம் திறந்திருப்பதையும் மேற்கத்திய ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.  மேலும் அந்நாட்டு நீதிமன்றம் தீவிரவாதி ஹபீஸ் சயீதுக்கு பாதுகாப்பையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் தேடப்பட்ட சர்வதேச தீவிராவதி ஒஸாமா பின் லேடன், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே பாதுகாப்பாக வாழ்ந்து வந்தபோது, பாகிஸ்தானுக்கு தெரியாமல் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி கொன்றது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close