பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் ஷாருக்கானின் சகோதரி போட்டியிடுகிறார்!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 09:51 am
cousin-of-bollywood-star-shah-rukh-khan-to-contest-election-in-pakistan

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் ஷாருக்கான் சகோதரி ஒருவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். 

பாகிஸ்தானில் வரும் ஜூலை 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில், கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை தேர்தலில், பெஷாவர் தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகர் ஷாருக்கானின் ஒன்றுவிட்ட சகோதரி நூர்ஜகான். இதனை ஷாருக்கான் தரப்பும் உறுதி செய்துள்ளது. 

தேர்தலில் போட்டியிடுவது குறித்து நூர்ஜகான் கூறுகையில், "பெண்களுக்காக என்னால் முடிந்த அளவுகளை நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அனைத்துத்துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும். எனது தொகுதிக்கு தேவைப்படும் உதவிகள் கிடைக்க வழிவகை செய்வேன்" என்றார். நூர்ஜகானின் தந்தை குலாம் முகமது, ஷாருக்கான் தந்தை தாஜ்முகமதுவின் மூத்த சகோதரர் ஆவார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close