பிரதமர் மோடிக்கு கைகொடுத்த பாகிஸ்தான் பிரதமர்!

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 11:52 am
mamnoon-modi-shake-hands-in-china

சீனா ஷாங்காய் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹுசைனும் கைகுலுக்கிக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் தான் வைரலாகி வருகிறது.

சீனாவில் குயிங்க்டோ நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்,  சீனா, ரஷ்யா, இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்துகொண்டனர். சீனா மற்றும் ரஷ்யா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் அதிபருடன் பேசவில்லை என தகவல் வெளியானது. இந்த நிலையில், மாநாடு முடிந்த பிறகு, தலைவர்கள் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உலக நாடுகளின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும், மாநாட்டில் நடந்தவற்றை பற்றியும் விளக்கமளித்தார். செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு, பிரதமர் மோடியும், பாகிஸ்தான் அதிபர் மம்னுன் ஹுசைனும் புன்னைகையுண்ட கைகுலுக்கிக்கொண்டனர். சில வார்த்தைகளும் பேசிக்கொண்டதாக தெரிகிறது. 

நாட்டின் எல்லையின் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கிக்கொண்ட இந்த புகைப்படம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close