பாக். முன்னாள் பிரதமர் தேர்தலில் போட்டியிட மீண்டும் தடை

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 08:55 am
sc-bars-musharraf-from-contesting-in-election

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷராஃப் வரும் பொதுதேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளளது. 

பாகிஸ்தானில் வரும் 25ந்தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷராஃப் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அவரது திட்டத்தை உச்சநீதிமன்றம் உடைத்துள்ளத. 

கடந்த 2013ம் ஆண்டில், தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக பர்வேஸ் முஷராஃப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெஷாவர் உயர்நீதிமன்றம் தடை வித்தது. இந்த தடையை எதிர்த்து கடந்த வாரம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் பர்வேஸ் முஷராஃப் மனுதாக்கல் செய்தார். வரும் 25ந்தேதி நடக்கும் பொதுத் தேர்தலில் முஷாஃப் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியது. 

பல்வேறு குற்ற வழக்குகளில் முஷாரஃப் சம்மந்தப்பட்டிருந்தாலும் அவர் கைது செய்யப்படமாட்டார் என்று கூறிய நீதிபதி, மேலும் இது தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில அவர் புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். 

இதுப்பற்றி கருத்து தெரிவித்த முஷாரஃப் தலைமையிலான அனைத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, கைபர் பாக்துன்கவா மாநிலம், சித்ரால் மாவட்ட தொகுதியில் அவர் போட்டியிடுவார் என அறிவித்தது. 

ஆனால் ரமலான் பண்டிகை வருவதாலும், சூழல் சரியாக இல்லை என தெரிவித்தும் முஷாரஃபின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரினார். இதை விசாரித்த நீதிபதி சாகிப் நிஸார், இராணுவ வீரரான முஷராஃப் ஒரு கோழைப் போல நீதிமன்றம் வர அஞ்சுவதாக கண்டனம் தெரிவித்து, கால அவகாசம் வழங்க முடியாது என்றார். 

எனினும், முஷராஃப் வியாழக்கிழமை மதியம் 2 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சாகிப் நிஸார் கெடு வித்தார். ஆனால் முஷராஃப் நேற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்த நீதிபதி சாகிப் நிஸார், பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட முஷராஃபிற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close