பாகிஸ்தான் தேர்தலில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 03:08 pm
ecp-extends-polling-time-by-one-hour

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் ஜூலை 25ம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்சிகளும் தங்களது அரசியல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அப்பாஸியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, தேர்தல் காலம் வரை இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து அந்நாட்டு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தது. இந்த அடிப்படையில், அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி  நசிருல் முல்க் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஜூன் 1ம் தேதி பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 

இந்நிலையில், பாகிஸ்தானில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 25ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு 8 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிவதே வழக்கமாகும். வாக்குப் பதிவு நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களை தேர்தலில் பங்கெடுக்க வைக்க முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தேர்தலில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் 'ஜமாத் உத் தவா' அமைப்பும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close