பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலில் பாக்: இந்தியா வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 01 Jul, 2018 06:50 am
fatf-issues-action-plan-pakistan-will-implement-while-on-grey-list

பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ள சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிஉதவி கண்காணிப்பு அமைப்பின் நடவடிக்கைக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புக்களுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. தங்களுடைய சொந்த மண்ணிலேயே இந்தப் பயங்கரவாதிகளுக்கு முகாம், பயிற்சி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறது. மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவன் பாகிஸ்தானில் கட்சி ஆரம்பித்துத் தேர்தலிலும் போட்டியிடுகிறான். அந்த அளவுக்கு மிக வெளிப்படையாகப் பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கரம் நீட்டப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து செயல்படும், சர்வதேச பயங்கரவாத நிதி உதவி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகளைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்புத் தற்போது பாகிஸ்தானையும் பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலில் இணைத்துள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில் பாகிஸ்தான் நிதி உதவி பெறும் வாய்ப்பு குறையும். 

எஃப்.டி.ஏ.எஃப் அமைப்பின் நடவடிக்கைக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையில் இருந்து தப்பிக்கப் பாகிஸ்தான் முற்றிலுமாகப் பயங்கரவாத அமைப்புகளுக்குச் செய்துவரும் நிதி உதவியை நிறுத்த வேண்டும். இதைச் சர்வதேச அமைப்பு 15 மாதங்களுக்குக் கண்காணிக்கும். 

பயங்கரவாத அமைப்புகளுக்குச் செய்துவரும் நிதி உதவியை நிறுத்தினால் அந்த அமைப்புக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவே செயல்பட ஆரம்பிக்கும். நிதி உதவி செய்தால், சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்குக் கிடைக்கவேண்டிய நிதி உதவி கிடைக்காமல் போகும். இதனால், பாகிஸ்தான் அச்சத்தில் உறைந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close