நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 06 Jul, 2018 05:51 pm
nawaz-sharif-sentenced-for-10-years-in-avenfield-corruption-case

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் ஊழல் செய்ததாக தொடர்ந்த வழக்கில், பாகிஸ்தான் ஊழல்தடுப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது கணவரும் நவாஸின் மருமகனுமான சப்தாருக்குஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நவாஸ் ஷெரிப்புக்கு 80 மில்லியன் பவுண்ட்(இந்திய மதிப்பில் 73 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பனாமா ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகன்கள் இருவர், மகள் மரியம் ஆகியோர் லண்டனில் வசித்து வருகின்றனர். தற்போது இந்த தீர்ப்பினால் பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் ஷெரிப்மற்றும் அவரது குடும்பத்தினர் போட்டியிட முடியாது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close