கால் வைத்ததும் கைது... நவாஸ் ஷெரிப்பை சிறையில் அடைக்க பாகிஸ்தான் போலீஸ் தீவிர ஏற்பாடு!

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 02:13 pm
nawaz-sharif-and-maryam-nawaz-to-be-arrested-on-arrival-at-lahore-airport-says-pakistan-anti-corruption-official

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகிய இருவரையும் லாகூர் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய பாகிஸ்தான் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் உலக அளவில் அதிக முதலீடு செய்தவர்கள் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பனாமா பேப்பர்ஸ் மூலம், நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் ஊழல் செய்ததாக தொடர்ந்த வழக்கில், பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது கணவரும் நவாஸின் மருமகனுமான சப்தாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் நவாஸ் ஷெரிப்புக்கு 80 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் 73 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 3 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தற்போது லண்டனில் இருக்கும் நவாஸ் மற்றும் குடும்பத்தினர் வருகிற 13ம் தேதி பாகிஸ்தான் திரும்ப உள்ளத்தக்க தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இவர்களை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். லண்டன் நீதிமன்ற உத்தரவை பாகிஸ்தான் அரசு உறுதியாக நிறைவேற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close