பாக். தேர்தல் பிரசாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 பேர் பலி

  Padmapriya   | Last Modified : 11 Jul, 2018 01:03 pm
suicide-bombing-kills-13-at-north-west-pakistan-election-rally

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

பாகிஸ்தான் அரசின் ஆட்சிக் காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஜூலை 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு பேசினார். பிரசாரத்துக்கு அதிகளவில் கூட்டம் வந்திருந்தது.  அப்போது கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தங்களிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இந்த திடீர் தாக்குதலில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த மோசமான தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close