அணுகுண்டைத் தாருங்கள்...ஹாலந்தை அழிக்கிறேன்: பாகிஸ்தான் கட்சித் தலைவர் பகீர்

  Padmapriya   | Last Modified : 12 Jul, 2018 12:56 am
if-i-had-the-atom-bomb-i-would-wipe-out-holland-khadim-rizvi

என்னிடம் அணுகுண்டை அளித்தால் பூமி பந்தில் ஹாலாந்து என்ற நாட்டையே இல்லாமல் செய்திடுவேன் என்று பாகிஸதானின் தெஹ்ரீக்-இ-லபாய்க் யா ரசூல் அல்லாஹ் தலைவர் காதிம் ஹுசைன் ரிஸ்வி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர இஸ்லாமிய மதவாத கட்சித் தலைவரான இவர் அங்கு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 152 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது கவனிக்கத்தக்கது. 

பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தெஹ்ரீக்-இ-லபாய்க் யா ரசூல் அல்லாஹ் (டி.எல்.ஒய்.) தலைவர் காதிம் ஹுசைன் ரிஸ்வி கூறுகையில், "அணுகுண்டுகளை என்னிடம் தாருங்கள் ஹாலாந்து என்ற நாடே பூமிப் பந்தில் இல்லாமல் செய்துவிடுவேன். அதன் பின் அவர்களால் கேலிசித்திர போட்டிகள் எல்லாம் நடத்தவே முடியாது" என்றார்.

டச்சு நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடிக்கும் சுதந்திரக் கட்சி கடந்த வாரம் கேலிச்சித்திர போட்டிக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நபிகள் நாயகம் என்று தலைப்பு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே அந்நாட்டு பத்திரிகைகளில் இஸ்லாமிய எதிர்ப்பு போக்குடைய கேலிச் சித்திரங்களுக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இத்தகைய அறிவிப்பு வெளியானது. இதனை தாக்கி பேசுகையில் காதிம் ஹுசைன் ரிஸ்வி மேல் குறிப்பிட்டவாறு பேசினார். 

சமீபத்தில் பாகிஸ்தானில், சட்ட அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரி தெஹ்ரீக்-இ-லபாய்க் யா ரசூல் அல்லாஹ் நடத்திய போராட்டத்துக்கு அரசு பணிந்தது. 

ஆட்சியாளர்கள் பதவியேற்கும்போது இறைத் தூதரின் பெயரைக் குறிப்பிட்டு உறுதியேற்பதில் திருத்தங்கள் கொண்டுவந்த சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீது பதவி விலக வேண்டும் என்ற காதிம் ஹுசைன் ரிஸ்வி தலைமையிலான டி.எல்.ஒய். அமைப்பு தலைமையில் இஸ்லாமிய அமைப்புகள் ராவல்பிண்டியில் தொடர்ந்து மூன்று வாரங்களாகச் சாலை மறியலில் ஈடுபட்டன. இதற்கு இணங்கி சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close