பாகிஸ்தான் பெஷாவர் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 01:06 pm
pakistani-taliban-claim-bombing-at-rally-that-killed-21

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் தேர்தல் பிரசாரத்தின்போது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானில் ஜூலை 25ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வருவதையொட்டி, அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இந்த நிலையில், பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நேற்று முன்தினம் (ஜூலை 10) தேசிய அவாமி கட்சி சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட இந்த கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர் ஹாரூன் பிலார் கலந்து கொண்டு பேசினார். அந்த சமயத்தில், அங்கு நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இந்த திடீர் தாக்குதலில், அவாமி கட்சி வேட்பாளர் ஹாரூன் பிலார் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவே, தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்த மோசமான தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close