நவாஸ் ஷெரீபை சுற்றி வளைக்கும் பாக். போலீஸ்: லண்டனில் பேரன்கள் கைது  

  Padmapriya   | Last Modified : 13 Jul, 2018 07:40 pm
i-am-coming-back-for-the-future-generations-of-pakistan-mein-karz-chukane-aa-raha-hun-jo-mujh-par-wajib-hai

பாகிஸ்தானின் முன்னாள் பிரமதர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் இன்று கைது செய்யப்பட உள்ள நிலையில், லண்டனில்
இருக்கும் அவரது பேரன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரமதர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீப் ஆகிய இருவரும் பனாமா லீக்ஸ் வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று லண்டனிலிருந்து பாகிஸ்தான் வர இருக்கும் அவர்களை லாகூர் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.  லண்டனில் நவாஸ் ஷெரீபின் மனைவி புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, செயற்கைசுவாச கருவிகளின் உதவியுடன் மோசமான கட்டத்தில் உள்ளார்.  அவரை பார்த்துவிட்டு நவாஸ் ஷெரீப் மற்றும் மரியம் பாகிஸ்தான் திரும்புகின்றனர். 

பாகிஸ்தான் வந்து இறங்கியதும் நவாஸ் ஷெரீப் மற்றும் மரியம் கைது செய்யப்பட உள்ளதை ஒட்டி, பத்தாயிரத்துக்கும் மேலான போலீஸார் லாகூர் விமான நிலைத்தை சுற்றி குவிக்கப்பட்டுள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் நவாஸ் கட்சியினர், விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானதால், லாகூர் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து முக்கிய சாலைகளும் முடக்கப்பட்டுள்ளன.  நவாஸ் ஷெரீப் மற்றும் மரியம் ஆகியோர் இரவுக்குள் கைது செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. 

லண்டனில் பேரன்கள் கைது:

லண்டனில் உள்ள நவாஸ் ஷெரிப்புக்கு சொந்தமான அவன்பீல்டு வீட்டின் முன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் சிலர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் சிலர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் ஷெரீப் மற்றும் மரியம் மகன்களான ஜுனைத் மற்றும் மைத்துனர் ஜக்கரியா ஆகியோருக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர். சிலர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஜுனைத் மற்றும் ஜக்கரியா வீட்டில் இருந்து வெளியேவந்து போராட்டக்காரர்கள் சிலரை தாக்கினர். இது தொடர்பான புகாரின் பேரில் நவாஸ் ஷெரீபின் பேரன்கள் கைது செய்யப்பட்டனர். 

முன்னதாக பனாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவி பறிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் மீதான வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை  நடந்து வருகிறது.  இதனிடையே, அந்த ஊழல் பணத்தில் லண்டனின் அவன்பீல்டு என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் கடந்த வாரம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அவரது மகள் மரியமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்து உத்தரவிடப்பட்டது.  அதோடு 75 கோடி அபராதமும் அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close